''கோட்'' திரைப்படத்தின் நியூ அப்டேட்: வைரலாகும் போஸ்டர்! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் 'லியோ' திரைப்படத்தை தொடர்ந்து தனது 68 வது திரைப்படத்தில் நடித்த வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரசாந்த், சினேகா, லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த திரைப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

'கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்' (G.O.A.T) என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் இடையே கவனத்தை பெற்றது. 

இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவும் நடிகர் விஜய்யும் இணை ஒரு பாடலை பாட இருப்பதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு இந்த திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை பட குழு வெளியிட்டுள்ளது. அதில் நடிகர்கள் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Goat Movie New Update Viral Poster


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->