லதா மங்கேஷ்கர் மறைவுக்கு ஜி.கே.வாசன் இரங்கல்.! - Seithipunal
Seithipunal


பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் திரு. ஜி.கே. வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில்

இந்தியாவின் மிகப்பிரபலமான பாடகி லதா மங்கேஷ்கர் அவர்கள் மறைந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவரது இழப்பு  இசைத்துறைக்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்

நம் நாட்டின் மிகப்புகழ் பெற்ற பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் அவர்களின் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது.

கலைத்துறைக்காக, பாடல்களை பாடுவதற்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் பிறந்த இவர் 4 வயதில் பாட ஆரம்பித்து, நாடு முழுவதும் தமிழ் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடி தனக்கென்று ஓர் தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டவர்.

70 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய திறமைமிக்கவர்.

குறிப்பாக ஹிந்தி பாடல்களில் முன்னணியில், முதன்மையானவாரக வலம் வந்தவர்.  தேசபக்தி பாடல் பாடி ஒட்டு மொத்த இந்தியர்களின் பாராட்டைப் பெற்றவர்.

பாரத ரத்னா, தாதா சாஹெப் பால்கே, பத்ம பூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும், பட்டங்களையும் பெற்ற பெருமைமிக்கவர்.

உலக அளவில் அதிக பாடல்களைப் பாடியதால் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த சாதனையாளர்.

இவரது குரல் இசைக்குயிலாய் கலைத்துறையைத் தாண்டி அனைத்து தரப்பு மக்களையும் மனம் மகிழச்செய்தது.

கடுமையாக உழைத்துப் பாடிய, சிறந்த பாடகி. பெரிய வெற்றிகளைப் பெற்ற போதும் அடக்கமும், அமைதியும், பண்பும் கொண்டவர்.

அவர் வருங்கால பாடகர்களுக்கு முன்மாதிரியாக, வழிகாட்டியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். அவர் மறைந்தாலும் அவரது பாடல்கள் காலம் காலமாக வலம் வரும், மக்கள் மனதில் நிலைத்து நிற்கும். வாழ்க அவரது புகழ், வளர்க அவர்தம் பெருமை.

அவரது இழப்பு கலைத்துறைக்கும், இசைத்துறைக்கும், சினிமாத்துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடு செய்யமுடியாத  பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கலைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் த.மா.கா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GKVasan Condolences to Lata Mangeshkar


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->