சமந்தாவையும், விராட் கோலியையும் இணைத்து பேசிய ஃபிட்னெஸ் ட்ரெயினர்.! சிலிர்க்கவைத்த பேட்டி.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் உச்சபட்ச நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் பிரபல நடிகர் நாக சைதன்யாவை நான்காண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்ப்பட்டு சமீபத்தில் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக அறிவித்தனர். 

இதனால், மிகப்பெரிய மன உளைச்சலில் இருந்து நடிகை சமந்தா சமீபகாலமாக தான் மீண்டு வந்து தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். அத்துடன் தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள மிகுந்த சிரத்தை மேற்கொண்டு வருகிறார். அவர் தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்கள் பலவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவார். 

இந்த நிலையில் சமந்தாவின் பிட்னஸ் டிரெய்னர் இது குறித்து ஒரு பேட்டி அளித்துள்ளார்.

 அந்த பேட்டியில், "சமந்தா மட்டும் ஒரு அத்லெட்டாக இருந்தால் அவர் விராட் கோலி போல இருப்பார். அவர் டெட்லிப்ட் முதல் யோகா வரை அனைத்தையும் முயற்சிக்கிறார். மிகவும் கடினமான விஷயங்களை தேடி தேடி செய்கிறார். தான் விரும்பிய ஒன்றை அடைவதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்க தயாராக இருக்கிறார்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fitness trainer about samantha


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->