அடேங்கப்பா இந்த நடிகையா இது! குழந்தையா இருக்கும்போது இவ்வளவு க்யூட்டா இருக்கிறாரே! - Seithipunal
Seithipunal


சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் திரைத்துறை பிரபலங்கள் மற்றும் செலிபிரிட்டிஸ் தங்களது மலரும் நினைவுகளை அவ்வப்போது புகைப்படங்களாக பகிர்ந்து நெஞ்சில் நிறைந்திருக்கும் நீங்காத பசுமையான நினைவுகளை ரசிகர்களுடனும் பகிர்ந்து கொள்கின்றனர்.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், பாடகியாகவும் மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக விளங்கி வருபவர் ஆண்ட்ரியா ஜெர்மியா. இவர் கௌதம் மேனனின் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். வடசென்னை படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகவும் பரவலாக பேசப்பட்டது.

தற்போதைய மிஷ்கின் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் பிசாசு 2 திரைப்படம் வெகு விரைவில் திரைக்கு வர இருக்கிறது. பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையிலிருக்கும் கதாபாத்திரங்களையும் சர்ச்சையான கதாபாத்திரங்களையும் துணிவோடு ஏற்று நடிப்பவர் ஆண்ட்ரியா.

இவர் சமீபத்தில் தனது குழந்தை பருவத்து புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார். அந்தப் புகைப்படம் ரசிகர்களிடம்  வைரலாகி இருக்கிறது. சிறுவயது ஆண்ட்ரியாவின் புகைப்படத்தை ரசிகர்கள் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். பாவாடை சட்டையில் குழந்தையாக கியூட்டாக காட்சியளிக்கிறார் ஆண்ட்ரியா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous tamil actress chidhood picture went viral on internet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->