வயதான அந்த நடிகருடன்.. ரகசிய உறவில்.. இருந்த ஆண்ட்ரியா.?!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் நடிகையாக மட்டுமல்லாமல் பாடகி, டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முக கலைஞராக கோலிவுடில் வலம் வருகிறார். தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் சர்ச்சையான கதாபாத்திரங்களையும் தைரியமாக எடுத்து நடிப்பவர்.

மிஸ்கின் இயக்கத்தில் இவர் நடித்த பிசாசு 2 திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியாவை பற்றிய புதிய கிசு கிசு ஒன்று கோலிவுட் வட்டாரங்களில் தீயாகப் பரவி வருகிறது. நடிகை ஆண்ட்ரியா இசையமைப்பாளர் அனிருத்துடன் காதலில் இருந்தார் என்று  இதற்கு முன்னர் கிசு கிசுக்கப்பட்டது. அவை உண்மை என்பது போல சமூக வலைதளங்களில் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தின.

தமிழ் சினிமாவில் சில காலமாகவே  வயதான நடிகர் ஒருவருடன் ஆண்ட்ரியா ரகசிய உறவில் இருந்ததாக கிசு கிசுக்கப்பட்டது. ஆனால் அந்த நடிகர் யார் என்ற விவரம் அப்போது தெரியவில்லை. தற்போது அதனைப் பற்றிய விபரங்கள் வெளியாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆண்ட்ரியா உலக நாயகன் கமல்ஹாசன் உடன் ரகசிய உறவில் இருந்ததாக தற்போது செய்திகள் வெளியாகி இருக்கின்றன. விஸ்வரூபம், உத்தமவில்லன் மற்றும் விஸ்வரூபம் 2 ஆகிய திரைப்படங்களில் தொடர்ச்சியாக கமல்ஹாசனுடன் ஆண்ட்ரியா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவருக்கும் இடையேயான ரகசிய உறவின் அடிப்படையிலேயே இந்த வாய்ப்புகள் கொடுக்கப்பட்டதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fame actress had an secret affair with kollyood biggest star creates new contoversy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->