அசத்தலாக வெளியான எதற்கும் துணிந்தவன் ஃபர்ஸ்ட் சிங்கிள்.! விக்னேஷ் சிவன் கைவண்ணம் எப்படியிருக்கு.?! - Seithipunal
Seithipunal


இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ராதிகா, சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ், சூரி, புகழ், தங்கதுரை உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த நிலையில், வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் ஓப்பனிங் சாங் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். மேலும், இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர்களான அனிருத் மற்றும் ஜிவி பிரகாஷ் குமார் இருவரும் இணைந்து பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Etharkum thuninthavan 1st single release


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->