‘என்னை விட்டு.. உயிர் போனாலும்’ யுவன் குரலில் வைப் செய்யும் ரசிகர்கள்.! வெளியான பாடல்.!  - Seithipunal
Seithipunal


கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.அகோரம் மற்றும் கல்பாத்தி எஸ்.சுரேஷ் உள்ளிட்டோர் இணைந்து தயாரிப்பில் உருவாகி இருக்கின்ற படம் தான் லவ் டுடே. இந்த படத்தை, ‘கோமாளி’ பட புகழ் பிரதீப் ரங்கநாதன் தான் இந்த படத்தை இயக்கி அதில் கதா நாயகனாக நடித்து இருக்கின்றார். 

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகி இருக்கின்ற, ‘லவ் டுடே’ படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஹீரோயினாக 'நாச்சியார்' திரைப்படத்தில் நடித்து இருந்த இவானா நடித்து இருக்கின்றார். 

ராதிகா சரத்குமார், சத்யராஜ் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கின்றார். இந்த திரைப்படத்தில் பாடகர் சித் ஸ்ரீ ராம் குரலில், ‘என்னை விட்டு உயிர் போனாலும்’ என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இத்தகைய நிலையில், யுவன் குரலில் தற்போது இந்தப் பாடல் வெளியாகி இருக்கின்றது. யுவன் ரசிகர்கள் பலரிடமும் 'இந்த பாடல் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ennai vittu uyir ponalum song in yuvanshankar raja voice


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->