ரன்பீர் கபூருக்கு ED சம்மன்! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


வட இந்தியாவில் மகாதேவ் ஆப் என்ற ஆன்லைன் சூதாட்ட செயலி மூலம் லட்சக்கணக்கானோர் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். இதில் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்து இருப்பதாக அமலாக்கத்துறை கண்டறிந்ததை அடுத்து இதுகுறித்தான விசாரணையில் இறங்கியது.

மகாதேவ் சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்தும் நோக்கில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் பணம் பெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சில ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் வரும் அக்டோபர் 6ம் தேதிக்குள் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலி மோசடியில் மேலும் பல பாலிவுட் பிரபலங்கள் சிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்களுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ed sent Summon to Ranbir Kapoor


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->