நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று உறுதி! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்திருந்தது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தமிழக அரசு. அந்த வகையில், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் சில  கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு.

இந்த நிலையில் கொரோனா தொற்று சினிமாத் துறையையும் விட்டுவைக்கவில்லை. கடந்த வாரம் நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியது. மேலும், நடிகர் கமலஹாசன் மற்றும் விக்ரம் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

அடுத்ததாக திரிஷா, ஷெரின், சத்யராஜ் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய பிரபலங்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில், தற்போது பிரபல மலையாள நடிகரான துல்கர் சல்மானுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Duquer Salman tested covid positive


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->