ஹிந்தியில் பேசணுமா?...சிரித்தே கிழித்து தொங்க விட்ட நடிகை மீனா...நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், 1990-களின் கனவு நாயகியாகவும் வலம் வந்த நடிகை மீனா,  கடந்த 2009ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். நுரையீரல் தொற்றின் காரணமாக கடும் அவதிப்பட்டு வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர், கடந்த 2022ல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

மீனாவுக்கு நைனிகா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையே நடிகர் விஜய்யின் தெறி படத்தில் விஜய்க்கு குழந்தையாக நடித்து நைனிகா கவனம் பெற்றார். நடிகை மீனா திரிஷியம் 2, ப்ரோ டாடி படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர் மேலும் 2 படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் விழாவில் நடிகை மீனா பங்கேற்ற போது, அவரிடம் ஹிந்தியில் பேச பரிந்துரைத்ததாக சொல்லப்படுகிறது.

அப்போது நடிகை மீனா, இது ஹிந்தி விழாவா என்றும், பிறகு ஏன் என்னை அழைத்தீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நான் இது தென்னிந்திய விழா என நினைத்தேன் என்றும், தென்னிந்திய படங்களும் தென்னிந்திய நடிகர்களும் சிறப்பானவர்கள் என்று சிரித்துக்கொண்டே கூறியுள்ளார்

நான் ஒரு தென்னிந்தியர் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று பேசிய அவர், ஐபா உர்சவம் தென்னிந்தியா மட்டுமின்றி வட இந்திய சினிமாக்காரர்களையும் ஒன்றிணைத்து பெரிய நிகழ்வாக நடத்துகிறது என்று கூறியுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Do you want to speak in hindi actress meena who broke down laughing what happened


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->