சச்சின், தோனி, யுவன் சங்கர் ராஜாவை திட்டிய  'லவ் டுடே' இயக்குனர்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதனைத் தொடர்ந்து காதல், காமெடி, பொழுதுபோக்கு என்று 2 கிட்ஸ் விரும்பும் படமாக வந்துள்ள இந்த ‘லவ் டுடே’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த அக்டோபர் 4ம் தேதி வெளியான திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்று வருகிறது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம் இதுவரை இப்படம் ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனின் பழைய பேஸ்புக் பதிவை வைத்து தற்போது நெட்டிசன்கள் பலரும் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.அதாவது 'லவ் டுடே' படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்திருந்தார். ஆனால் கடந்த 2010-ம் ஆண்டு தனது பேஸ்புக்கில் யுவன் சங்கர் ராஜாவை திட்டி பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் யுவன்‌ வேஸ்ட் மற்றும் ஃப்ராட் என்று இருக்கிறது. இதேபோன்று கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது சச்சின் டெண்டுல்கர் மற்றும் தோனியையும் விமர்சித்து பிரதீப் பேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த பதிவுகளை பார்த்த நெட்டிசன் பலரும் தற்போது பிரதீப் ரங்கநாதனை சமூக வலைதளங்களில் ட்ரோன் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director pradeep ranganathan old fb posts Viral


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->