சர்ச்சையில் சிக்கிய  'லவ் டுடே' இயக்குனர் ப்ரதீப்.. பேஸ்புக்கை விட்டே ஓட்டம்.! - Seithipunal
Seithipunal


‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதனைத் தொடர்ந்து காதல், காமெடி, பொழுதுபோக்கு என்று 2 கிட்ஸ் விரும்பும் படமாக வந்துள்ள இந்த ‘லவ் டுடே’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த அக்டோபர் 4ம் தேதி வெளியான திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்று வருகிறது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம் இதுவரை இப்படம் ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனின் பழைய பேஸ்புக் பதிவை வைத்து தற்போது நெட்டிசன்கள் பலரும் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.அதாவது 'லவ் டுடே' படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்திருந்தார். ஆனால் கடந்த 2010-ம் ஆண்டு தனது பேஸ்புக்கில் யுவன் சங்கர் ராஜாவை திட்டி பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் யுவன்‌ வேஸ்ட் மற்றும் ஃப்ராட் என்று இருக்கிறது. இதேபோன்று கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது சச்சின் டெண்டுல்கர் மற்றும் தோனியையும் விமர்சித்து பிரதீப் பேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த பதிவுகளை பார்த்த நெட்டிசன் பலரும் தற்போது பிரதீப் ரங்கநாதனை சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் பிரதீப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், 'என் பெயரில் பரவி வரும் பல பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டன. ஒரு வார்த்தையை மாற்றினால் கூட பல விஷயங்கள் மாறும் என்பதால் முகநூல் கணக்கை முடக்கி விட்டேன்.

விஷயங்களை மாற்ற முயற்சிப்பவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை, மாறாக மக்கள் என்னை எவ்வளவு ஆதரிக்கிறார்கள் என்பதைக் காட்டியதற்கு அவர்களுக்கு நன்றி.  மேலும் சில பதிவுகள் உண்மையானவை.  ஆனால் கசப்பான வார்த்தைகள் கொண்ட பதிவுகள் போலியானவை.  

நான் தவறு செய்துவிட்டேன், வயதுக்கு ஏற்ப நாம் அனைவரும் வளர்ந்து கற்றுக்கொள்கிறோம், அதை சரிசெய்ய முயற்சித்தேன்.  நான் இன்னும் ஒவ்வொரு நாளும் ஒரு சிறந்த மனிதனாக மாற முயற்சிக்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director pradeep ranganathan deactivate Facebook


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->