சிவகார்த்திகேயனுடன் இணைகிறாரா மாரி செல்வராஜ்? - வெளியான அதிரடித் தகவல்.!!  - Seithipunal
Seithipunal


சிவகார்த்திகேயனுடன் இணைகிறாரா மாரி செல்வராஜ்? - வெளியான அதிரடித் தகவல்.!! 

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் உருவாகி வரும் படம் மாவீரன். இயக்குநர் மடோனா அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் அதிதி ஷங்கர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். 

இந்தத் திரைப்படம் இந்த மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில், இயக்குநர் மாரி செல்வராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, “நான் இயக்குநரானதை விட என்னுடைய நண்பர் அருண் விஸ்வா தயாரிப்பாளர் ஆனது தான் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

நானும், சிவகார்த்திகேயனும் ஒருவருக்கொருவர் அறிமுகமானதில் இருந்து நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். அவருடைய பந்தில் அதிக முறை அவுட் ஆகியிருக்கிறேன். பந்தை மெதுவாகப் போடுங்கள் எனறுச் சொன்னால் கேட்கவே மாட்டார்.

சிவகார்த்திகேயனை திரையில் எப்படி பார்க்க நினைத்தேனோ அப்படி ஒரு படமாக ’மாவீரன்’ வந்துள்ளது. மண்டேலா போன்ற சமகால அரசியலைப் பேசக்கூடிய படத்தை நேர்த்தியாகக் கொடுத்தவர் இயக்குநர் மடோனா.

அப்படி ஒருவர் கையில் சிவகார்த்திகேயன் கிடைத்தால் எந்த மாதிரியான படம் வரும் என்பதற்கான பதிலாக ’மாவீரன்’ உள்ளது. இந்தப் படத்திலும் சமூகத்திற்குத் தேவையான ஒன்று நிச்சயம் இருக்கும். 

தயாரிப்பாளர் அருண் விஸ்வா மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நான் எப்போது வேண்டுமானாலும் படம் இயக்குவேன். எங்களுடைய தற்போதைய கமின்ட்மென்ட் எல்லாம் முடிந்த பிறகு அதுப்பற்றி பேசி முடிவெடுப்போம்” என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director mari selvaraj speech in maveeran movie trailer released function


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->