பிரபல நடிகருடன் கைகோர்க்கும் இயக்குனர் அட்லீ.! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகருடன் கைகோர்க்கும் இயக்குனர் அட்லீ.!

பிரபல இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து படம் எடுத்து வருகிறார். அதிலும் குறிப்பாக தளபதி விஜய் இயக்குனர் அட்லீயின் திறமையின் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாகவே தொடர்ந்து மூன்று படங்களை கொடுத்தார். 

இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு சென்ற அவர் இந்திய திரை நட்சத்திரம் ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படம் கடந்த 7ம் தேதி திரையரங்கில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. 

வெளியான நாட்களிலேயே 700 கோடியை கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இயக்குனர் அட்லீ தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அல்லு அர்ஜுனுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. 

தற்போது அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. புஷ்பா இரண்டாம் பாகம் முடிவடைந்த உடன் அல்லு அர்ஜூன், அட்லீ படம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director atlee joined work with actor allu arjun


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->