விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தோனி!  - Seithipunal
Seithipunal


நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான 'போடா போடி' படத்தின் மூலம் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமானார். 

அதன் பிறகு விஜய் சேதுபதி-நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றார். 

இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை இயக்கி தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். 

இயக்குனர் விக்னேஷ் சிவன் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிக்கும் திரைப்படத்தை இயக்க இருந்த நிலையில் திடீரென அந்த படத்தினை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. 

இந்த அறிவிப்பு ரசிகர்கள் இடையே மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியுடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்துள்ளார். 

தோனி மற்றும் யோகி பாபு நடிக்கும் விளம்பர படம் ஒன்றை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இது தொடர்பான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள், அஜித் படம் போனால் என்ன தோனியை இயக்குகிறார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhoni directed by Vignesh Shivan


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->