டிமாண்டி காலனி 2 படத்தின் ட்ரெய்லர் வெளியீடு - எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


அஜய் ஞானமுத்து எழுதி இயக்கிய ஒரு திகில் திரைப்படம் ’டிமாண்டி காலனி’. அருள்நிதி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற இப்படத்தின் 2-ம் பாகம் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 

இதிலும் அருள்நிதி தொடர்ந்து நடித்துள்ளார். ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் ஹாரோர் வகை படமான இதன் டிரெய்லர் டிசம்பர் 16 அன்று வெளியாக உள்ளது. அஜய் ஞானமுத்து தயாரிக்கும் இந்தப் படத்தை வெங்கி வேணுகோபால் இயக்கி வருகிறார். 

சாம் சி.எஸ். இசையமைக்கும் இந்தப் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வரும் நிலையில், ஏற்கனவே கல்லறையில் இருந்தபடி கையில் ‘டிமாண்டி காலனி 2’ டாலரை வைத்திருக்கும் அருள்நிதி போஸ்டர் வெளியாகி தெறிக்க விட்டது.

தற்போது டிரெய்லர் வெளியானால் ரசிகர்களிடையே படத்துக்கு இன்னும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இந்தப் படத்தில் அருள்நிதி முக்கிய பங்களித்து இருப்பார் என்று கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

demontey colony 2 trailer released update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->