இந்த டைம் மிஸ் ஆகாது! முழுக்க முழுக்க என் படம்தான்! டிடி ரிட்டன்ஸ் குறித்து சந்தானம் பேச்சு!! - Seithipunal
Seithipunal


நடிகர் சந்தானம் நடிப்பில் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் வெளியான தில்லுக்கு துட்டு பாகம் 1 மற்றும் 2 திரைப்படங்கள் வெற்றி பெற்றதை அடுத்து இந்த கூட்டணி மீண்டும் தில்லுக்கு துட்டு ரிட்டன்ஸ் திரைப்படத்தை உருவாகி உள்ளது. இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை சுரபி நடித்துள்ளார். மேலும் ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, கிங்ஸிலி உள்ளிடோர் முக்கிய கதாபாத்திர நடித்துள்ளனர்.

ஆர்.கே என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வரும் ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் நேற்று பட குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நடிகர் சந்தானம் "பேய் படத்தில் எல்லாரையும் சாகடித்தாலும் நிஜ வாழ்க்கையில் எங்களை வாழ வைக்கிறது. 

தில்லுக்கு துட்டு திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்கள் வெற்றி பெற்றதை அடுத்து டிடி ரிட்டர்ன்ஸ் மக்களின் மனங்களை கவரும் என்று நம்புகிறேன். இந்த திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு பேயும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். இயக்குனர் பிரேம் ஆனந்த் மிகவும் சிறப்பாக உருவாக்கியுள்ளார்.

என்னுடைய நடிப்பில் வெளியான சில படங்கள் சந்தானம் படம் போல் இல்லையே என சொல்பவர்களுக்காக டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் முழுக்க முழுக்க சந்தானத்தின் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் காமெடி மிஸ் ஆகாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம் இந்த திரைப்படம் அமைந்துள்ளது. வரும் ஜூலை 28ஆம் தேதி வெளியாகும் டிடி ரிட்டன்ஸ் படத்திற்கு அனைவரும் தங்கள் ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என நடிகர் சந்தானம் பேசி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DD Returns entirely Santhanam comedy film


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->