தனுஷின் 'D56' மாஸ் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்.!! 
                                    
                                    
                                   d 56 movie update
 
                                 
                               
                                
                                      
                                            தமிழ் சினிமாவில் 'பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை' போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ், தற்போது நடிகர் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். ஒரு சரித்திர கதையில் பிரமாண்ட பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாக உள்ளது.
வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தற்காலிகமாக 'D56' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், 'D56' படத்தின் அப்டேட்டை தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- 'மாரி செல்வராஜ், தனுஷ், ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளது. 
ஆனால், அந்த படத்திற்கு முன்பு ஒரு தனுஷ் படம் உள்ளது. அதற்கு பிறகுதான் மாரிசெல்வராஜ் படம். அந்தப் படத்தை அறிவிப்பதற்கு முன்னதாகவே இந்தப்படத்தை அறிவித்துவிட்டோம். அந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும்' என்றுத் தெரிவித்தார்.