ஆமீர்கானுடன் பாலிவுட்டிற்கு தாவும் காமெடி நடிகர்.! ஆச்சிரியத்தில் கோலிவுட்..! - Seithipunal
Seithipunal


தமிழில் தற்போது முன்னணி காமெடியனாக வலம் வரும் யோகி பாபு, அடுத்த கட்டமாக பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடித்த தர்ம பிரபு, கூர்கா போன்ற படங்கள் ஏற்கனவே ரிலீசான நிலையில், பன்னி குட்டி, மண்டேலா, பப்பி போன்ற ரிலீசுக்கு தயாராகி வருகிறார்.

இந்த நிலையில், பாலிவுட் படத்தில் அமீர் கானுடன் யோகி பாபு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கூறப்படுகிறது.

ஆஸ்கர் விருது வென்ற ஆங்கில படமான ‘பாரஸ்ட் கம்ப்’ என்ற படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர் கான் நடிக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக தான் யோகி பாபுவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் சமூகவலைத்தளங்களில் யோகிபாபு பாலிவுட் செல்வது குறித்து கருத்துக்கள் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

comedy actor going to bollywood


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->