#BigBreaking : நடிகர் தனுசுக்கு 48 மணி நேரம் கெடு.! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு, நுழைவு வரி செலுத்துவதில் விலக்கு கேட்டு நடிகர் தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சற்றுமுன் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் ரோல்ஸ் ராயல்ஸ் என்ற சொகுசு காரை இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்திருந்தார். இந்த காருக்கு நுழைவு கட்டணமாக மத்திய அரசு 60 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

அந்த 60 லட்சம் ரூபாய் வரி தொகையில் 30 லட்சத்தை மட்டும் செலுத்திய நடிகர் தனுஷ், மீதி வரித் தொகையை செலுத்தாமல், அதில் விலக்கு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, ஏற்கனவே வரிவிலக்கு விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு அறிவுரை வழங்கிய அதே நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் நடிகர் என ஏன் குறிப்பிடவில்லை என்று? அதே கேள்வியை எழுப்பினார்.

மேலும், தான் ஒரு நடிகர் என்பதை நடிகர் தனுஷ் குறிப்பிடாமல் இருப்பது குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மெர்சல் ஆகிய நடிகர் தனுஷ், "அய்யா நான் தொடுத்த வழக்கை திரும்பப்பெறுகிறேன், எனக்கு வரிவிலக்கு வேண்டாம்" என்று தெரிவித்தார்.

ஆனால், அதனை ஏற்க மறுத்த நீதிபதி, சரமாரியான கேள்விகளை அடுத்தடுத்து எழுப்பினார். சாதாரண ஒரு சோப்பு கூட இந்திய குடிமகன்கள் வரி செலுத்துகிறார்கள். நான் ஏன் வரி செலுத்த வேண்டும். எனக்கு வரிவிலக்கு அளியுங்கள் என்று யாரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது இல்லை. பால் விற்பனை செய்யும் பால்காரர் கூட தனது இருசக்கர வாகனத்திற்கு போடும் பெட்ரோலுக்கு வரி செலுத்தி வருகிறார். நான் ஏன் வரி செலுத்த வேண்டும் என்று, வரி விலக்கு கேட்டு நீதிமன்றத்தை நாடுவதில்லை.

ஒரு சாமானிய மனிதனும் கூட வரி செலுத்தி வருகின்றனர் என்று நீதிபதி அவர்கள் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த நடிகர் தனுஷ் தரப்பு, "நாங்கள் திங்கள் கிழமைக்குள் நுழைவு கட்டண வரி பாக்கியை செலுத்த தயாராக இருக்கிறோம்" என்று பதிலளித்தனர்.

தனுஷ் தரப்பில் இதனை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு நீதிபதி அவர்கள் பகல் 2 மணிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். சற்றுமுன் தொடங்கிய இந்த வழக்கு விசாரணையில், 30 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை அடுத்து வரும் 48 மணி நேரத்துக்குள் நடிகர் தனுஷ் செலுத்த வேண்டும் என்று கெடு விதித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai hc order to dhanush


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->