திரைப்படங்களுக்கான மத்திய அரசின் விருது அறிவிப்பு.. தமிழில் 2 படங்கள் தேர்வு.!! - Seithipunal
Seithipunal


இந்திய மொழி சார்ந்த படங்களுக்கு மத்திய அரசு விருது வழங்குவது வழக்கம். தற்போது 2019 ஆண்டுக்கான விருது பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதிக தமிழ் திரைப்படங்கள் இரண்டு இடம்பெற்றுள்ளது. இயக்குனர் பார்த்திபன் இயக்கிய 'ஒத்த செருப்பு', இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்' ஆகிய தமிழ் படங்கள் மத்திய அரசு விருதுக்கு தேர்வாகியுள்ளது. 

நடிகர் பார்த்திபன் கடந்த ஆண்டு அடுத்து இயக்கிய படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இப்படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் திரைப்படம் முழுவதும் தோன்றும் வகையில் திரைக்கதையை இற்றிருந்தார் பார்த்திபன். இப்படம் இந்திய சினிமாவில் இதுவரை யாரும் கையாளாத பெரும் முயற்சி என அனைவரும் பாராட்டினர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறாத நிலையில் தற்போது மத்திய அரசு விருதுக்கு இப்படம் தேர்வாகியுள்ளது. 

அதையடுத்து, சென்னை மழை வெள்ளத்தில் வயதான தம்பதிகள் இடையே எதிர்பார்ப்பில் அளவில்லா அன்பு தான் ஹவுஸ் ஓனர். படத்தில் ஒட்டுமொத்த கதை சென்னையின் மழை நாட்கள் நம் கண்முன்னே கொண்டு வந்து நிற்க வைக்கிறது. இப்படம் நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இப்படங்கள் மட்டுமின்றி இந்தி, மலையாளம், மராத்தி உள்ளிட்ட பல மொழிப் படங்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central govt award for oththa seruppu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->