'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: உற்சாகத்தில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


அருண் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இந்த திரைப்படத்தில் பிரியங்கா கதாநாயகியாக நடித்துள்ளார். 

மேலும் இதில் சிவராஜ் குமார் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். 

முன்னதாக 'கேப்டன் மில்லர்' திரைப்படம் ஐமேக்ஸ் திரைகளில் வெளியாக இருப்பதாகவும் இந்த திரைப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் எனவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படம் வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

அதில், சென்சார் குழு இந்த திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Captain Miller Movie release update


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->