மரண அப்டேட் கொடுத்த கேப்டன் மில்லர் திரைப்படம்.! - Seithipunal
Seithipunal


அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'கேப்டன் மில்லர்'. ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இதில் நடிகர் தனுஷுடன் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. 

இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. மேலும், படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. 

அதாவது, கேப்டன் மில்லர் படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

captain millar trailer released tomarrow


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->