மது மற்றும் சிகரெட் பழக்கத்திலிருந்து விடுபட.... பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் அட்வைஸ்! - Seithipunal
Seithipunal


பாலிவுட் மற்றும் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் அமிதாப்பச்சன். இவர் தற்போது மது அருந்துவது மற்றும் சிகரெட் பழக்கத்தை கைவிடுவதற்கான வழிமுறைகளை தனது பிளாக்கில் பகிர்ந்திருக்கிறார் .

சமூகத்தில் இளைஞர்களிடம் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் பழக்கம் அதிகரித்து வருவதற்கான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது சினிமா. அதில் இடம்பெறும் ஹீரோக்கள் சிகரெட் பிடித்தல் மற்றும் மது அருந்துவதை பார்த்து இளைஞர் சமூகம் கெட்டுப் போவதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆனால் தற்காலங்களில் அந்த நிலை மாறி இருக்கிறது. சிகரெட் மற்றும் மது அருந்துவது போன்ற காட்சிகள் இடம்பெறும் போதே அதற்கு கீழ் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகளைப் பற்றிய விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் நடிகர் நடிகைகளும் போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை பற்றி சமூகத்தில் பேசத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தன்னுடைய பிளாக்கில் புகை பிடித்தல் மற்றும் மது அருந்துவதை  உடனடியாக எவ்வாறு கைவிடுவது என வழிமுறைகளை கூறியிருக்கிறார். அதன்படி  மது அருந்திக் கொண்டிருக்கும்போது அந்த கோப்பையை வீசி விடுங்கள்  மற்றும் சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் போது உதட்டிலிருந்து சிகரெட்டை துப்பி விடுங்கள்.  இந்த இரண்டும் தான் இவற்றை கைவிடுவதற்கு சிறந்த வழி என தெரிவித்துள்ளார் அமிதாபச்சன். கொஞ்சம் கொஞ்சமாக கைவிடுவதெல்லாம் வேலைக்காகாது. நீங்கள் இந்த பழக்கத்திலிருந்து வெளிவர நினைத்தால் இதுதான் வலி என அவர் தெரிவித்திருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bollywood Superstar Amitabh Bachchan ideas to Quit Alcohol and Cigarette Habits


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->