'நாளை பிறந்தநாள்.. வாழ்த்து வேண்டாம். ஆனா.? சர்ச்சை இயக்குனரின் ட்வீட் வைரல்.? - Seithipunal
Seithipunal


பாலிவுட் பிரபலமான இயக்குனர் ராம் கோபால் வர்மா. ரங்கீலா, சத்யா, ரத்த சரித்திரம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் இவர். குற்றப் பின்னணிகளை கொண்ட திரைப்படங்களை இயக்குவதே இவரது சிறப்பம்சமாகும்.

அவ்வப்போது சர்ச்சைக்குரிய  கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்தக் கூடியவர் இவர். ஆளும் அரசுக்கு எதிராகவும் பலமுறை சர்ச்சையான கருத்துக்களை கூறி சிக்கலில் மாட்டியிருக்கிறார்.

இவரது பிறந்த நாள் நாளை வர இருக்கிறது இதனை முன்னிட்டு வித்தியாசமான ஒரு பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் ராம் கோபால் வர்மா. அந்தப் பதிவில்  எனக்கு யாரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் உங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களை வைத்து என்னால் எதுவும் வாங்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர். அதற்கு பதிலாக குறைந்த விலைமதிப்புள்ள ஏதேனும் பரிசு பொருட்களையாவது எனக்கு அனுப்பி வையுங்கள். மலிவான பரிசுகளாக இருந்தாலும் பரவாயில்லை இலவசத்தை விட மலிவு சிறப்பானது என  பதிவிட்டு வழக்கம் போல சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் ராம்கோபால் வர்மா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bollywood director ram gopal varma tweet about his birthday creates controversy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->