தொழிலதிபருடன் ரகசிய திருமணம்... பாலிவுட் நடிகையின் ஹாட் நியூஸ்! - Seithipunal
Seithipunal


ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மகி கில். பஞ்சாபி நடிகையான இவர் அனுராக் கஷ்யப் இயக்கிய தேவ் டி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர். சல்மான் கான் நடித்த தபாங் உட்பட 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் தொழிலதிபர் மற்றும் நடிகர் மான ரவி கேசர் என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி வந்தது.  சமீபத்தில் இது தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளித்திருக்கிறார் மகி கில்.

அந்தப் பேட்டியில் அவரும் ரவி கேசரும் திருமணம் செய்ததை ஊடகங்களுக்கு அறிவித்திருக்கிறார். அவர்களின் திருமணம் தொடர்பாக எந்தவித புகைப்படங்களையும்  ஆதாரங்களையோ வெளியிடவில்லை. தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம் என்று மட்டும் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு ரவி கேசரும் மகி கில்லும்  பிக்சர் என்ற இணையதளத் தொடரில்  இணைந்து நடித்த போது காதலிக்க தொடங்கினர். இந்த ஜோடி தற்போது ரகசியமாக திருமணம் செய்து இருக்கிறது. அதனை ஊடகங்களுக்கும் அறிவித்துள்ளனர். மகி கில்லுக்கு வெரோனிகா என்ற ஐந்து வயது  மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bollywood actress secretly married to a businessman


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->