ப்ளூ ஸ்டார் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும்? - வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


பிரபல இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் 'ப்ளூ ஸ்டார்' என்றத் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்திலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்தப் படத்தை லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு செய்யும் இந்தப்படத்திற்கு தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். 

சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல், வரும் 25-ம் தேதி இந்தப் படம் உலகமெங்கும் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர். 

இந்த நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதாவது, நாளை மாலை ஆறு மணிக்கு படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

blue star movie trailer released


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->