வழக்கறிஞர் அவதாரம் எடுத்த பிக் பாஸ் ஜூலி.. ரசிகர்கள் ஆச்சரியம்.!  - Seithipunal
Seithipunal


கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் ஜூலி. இதனைத் தொடர்ந்,து அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அதிகமாக விமர்சிக்கப்பட்டார்.

ஜூலி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்தாலும் கூட அவரை சர்ச்சைகள் பின் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. இவர் மீது எக்கச்சக்க நெகடிவ் விமர்சனங்கள் ஏற்பட்டு வந்தது. 

இவர் சில குறும்படங்களில் நடித்து இருக்கின்றார். மேலும் பிரபல மாடலாகவும் அவர் வலம் வந்தார். பின் வெள்ளி திரையில் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.

அதன் பின் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி மக்களிடம் நல்ல பெயர் எடுத்தார். இந்த நிலையில், விஜய் டிவியின், 'தென்றல் வந்து என்னை தொடும்' சீரியலில் ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் ஜூலி நடிக்க இருக்கிறார். இந்த தகவல் தான் தற்போது சின்னத்திரை வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bigg Boss Julie in thenral vandhu ennai thodum serial


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->