ஒரு படம் தான்.! எனது அனுபவம் வித்தியாசமானது.!! பாரதிராஜா வெளியிட்ட வீடியோ வைரல்.!! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய நடிகர்கள் சங்க முன்னாள் தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு இயக்குனர் பாரதிராஜா வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.  அதில் "என் நண்பன், சிறந்த கலைஞன், சிறந்த மனிதாபிமானி, இன்று வரை அவரது வீட்டிற்குச்ச சென்று பசியாறாமல் வந்தவர்கள் யாரும் கிடையாது. நல்ல கலைஞன், பல நாட்களாக எந்தவிதமான மூவ்மென்டும் இல்லாமல் இருந்தது தமிழகம் மட்டுமல்ல, உலகமக்களையும் வருத்தமடைய செய்தது.


சினிமாவில் சம்பாதித்தவர்கள் பலர் இருக்கலாம் ஆனால் சினிமாவில் சம்பாதித்து பிறருக்கு அள்ளிக் கொடுத்தவர் விஜயகாந்த். அவருடன் ஒரு படம் தான் செய்திருக்கிறேன். ஆனால், அந்த படத்தில் எனது அனுபவம் வித்தியாசமானது. அந்த மாபெரும் கலைஞனின் இழப்பு தமிழகத்திற்கு மட்டுமல்ல, உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பு ஆகும்.

என்னால் நடந்து சென்று ஆக்டிவ்வாக அவருக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லையே என்ற கவலை இருக்கிறது. நடிப்பால், மனிதத்தன்மையால் உயர்ந்தவர் விஜயகாந்த். மனிதர்களுக்காக விஜயகாந்த் என்ன செய்தாரோ அதை அவரது ரசிகர்கள் செய்தால் போதும்" என உருக்கமாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bharathiraja condoling Vijayakanth video viral


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->