பிரபல பரத் பட நடிகை தாயானார்.! என்ன குழந்தை தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


கேரள நடிகையான பூர்ணா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். கேரள மாநிலம் கண்ணூரைச் சார்ந்த இவரது இயற்பெயர் ஷாம்னா காசிம் 2004 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மஞ்சு போல் ஒரு பெண்குட்டி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இவர். தமிழில் பரத்திற்கு ஜோடியாக முனியாண்டி விலங்கியியல் மூன்றாமாண்டு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

நடிகை அசினின் சாயலிலிருக்கும் இவர்  தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்தார். நடிகர் விஜய் கூட அசின் போல இவர் வருவார் என்று  பாராட்டு பெற்றவர். சில வருடங்களுக்கு முன் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை பற்றிய வரலாற்றுத் தொடரில் சசிகலா கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர். சவரக்கத்தி படத்தில் மிகவும் பிரமிப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

இவர் கடந்த வருடம் துபாயைச் சார்ந்த  பிரபல தொழிலதிபரான ஷானித் ஆசிஃப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு தனது வளைகாப்பு புகைப்படங்களை சமூக வலைதளமான  இன்ஸ்ட்டாகிராமில் இவர் ரசிகர்களுடன் பகிர்ந்திருந்தார் அந்தப் புகைப்படங்கள் ட்ரெண்டிங்காகியது.

இந்நிலையில் இவருக்கு துபாயிலுள்ள தனியார் மருத்துவமனையில் அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்தத் தகவலை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கும் தெரியப்படுத்தி இருக்கிறார் பூர்ணா என்ற ஷாம்னா காசிம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bharath film heroine poorna blessed with a baby boy


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->