வீட்டை விட்டு கோபியை வெளியே துரத்தும் பாக்கியா.?! பாக்கியலட்சுமி ரசிகர்களுக்கு அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் 08.30 மணி முதல் 9 மணி வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பு செய்யப்படும்.

இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்ற இந்த சீரியலில் இருந்து தற்போது செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆரியன் விலகியுள்ளார். சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ் குமார் நடித்து வருகிறார்.

கதாநாயகியாக சுசித்ரா ஷெட்டி பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இதில் கோபி தனது மனைவிக்கு தெரியாமல் ராதிகாவை கரம் பிடிக்க முயற்சித்து வந்த நிலையில், இவை அனைத்தும் பாக்கியாவுக்கு தெரிய வருகிறது.

இதனால், அவர் வீட்டை விட்டு பாக்கியா வெளியேறி தனது ஆபிஸில் தங்கி வரும் நிலையில், தற்போது கோபியை விவாகரத்து செய்வதற்காக பாக்கியா கோர்ட்க்கு செல்கிறார். இதனை தொடர்ந்து, சமீபத்திய ப்ரோமோ வீடீயோவில் கோர்ட் அவர்களுக்கு விவாகரத்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது இந்த சீரியலின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், கோபியை வீட்டை விட்டு வெளியே செல்ல சொல்லி பாக்கியலக்‌ஷ்மி விரட்டியடிக்கிறார். இந்த வீடீயோ வெளியாகி ரசிகர்களை அதிரவைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bakyalakshmi Promo Gopi may leave From Home


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->