பாவமே.! ஏடாகூடமாக வெப்சீரிஸில் நடித்துவிட்டு அலறியடித்து ட்வீட் போட்ட பாகுபலி நடிகர்.! பங்கமாக கலாய்க்கும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரானா டகுபதி. இவர் லீடர் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இதன் மூலம் இந்திய சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்.

அஜித் குமார் நடிப்பில் வெளியான ஆரம்பம் திரைப்படத்தில் முக்கியமான  கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இஞ்சி இடுப்பழகி மற்றும் என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய திரைப்படங்களிலும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மட்டுமல்லாது  ஹிந்தி திரைப்படங்களிலும்  இணையதள சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் ராணா டகுபதி. இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்த இணையதள தொடர் ஒன்று ரசிகர்களிடம் மிகவும் சர்ச்சையை கிளப்பியது. இந்த இணையதள தொடரில் 18 + காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருந்தன.

இவரது நடிப்பில் நெட் ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ராணா நாயுடு  என்ற தொடரில் தான் அப்படியான காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருந்தன. இது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ராணா இந்த இணையதளத் தொடரை குடும்பத்தோடு பார்க்காமல் தனியாக பார்க்க ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bahubali fame rana daggubathi requests his fans to watch his new series alone


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->