அயலி பட நடிகை.. இந்த ஹீரோயின் மகளா.?! ஆச்சர்ய தகவல்.!  - Seithipunal
Seithipunal


கோலிவுட் திரையுலையில் தற்போதைய காலகட்டத்தில் திரைப்படங்களை தவிர்த்து வெப் சீரிஸ்க்கு ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. பல வெப் சீரிஸ்கள் பெரிதாக பேசப்பட்டு வந்துள்ள நிலையில் தற்போது முத்துக்குமார் இயக்கிய அயலி என்ற வெப் சீரியஸ் ரசிகர்கள் மத்தியில் கருத்து பொருளாக பேசப்பட்டு உள்ளது.

Estrella stories தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் அபி நக்ஷத்ரா, அனுமொள், மதன், லிங்கா, சிங்கம் புலி, லவ்லின் சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரேவா என்பவர் இசையமைத்து வினை மைந்தன், சச்சின் மற்றும் முத்துக்குமார்  ஆகியோர் சேர்ந்து அயலி சீரியஸின் திரைக்கதையை எழுதி உள்ளனர். இந்த சீரியஸ் ஸீ 5 வலைத்தளத்தில் 26 ஆம் தேதி ஜனவரி மாதம் வெளியானது.

அயலி வெப் சீரியஸ் சமூக வலைத்தளங்களில் அதிக அளவு பேசப்பட்டு வருவதற்கு காரணம் இந்த சீரியல் பெண்களின் கல்வி, குழந்தை திருமண முறை போன்றவற்றை மையமாக வைத்து  பெண்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும்  கதையாகும். இந்த படத்தில் அபி நட்சத்திரா நடித்திருக்கும் தமிழ்ச்செல்வி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.

இந்த வெப் சீரியஸில் மைதிலி கதாபாத்திரத்தில் நடித்த லவ்லின்  சந்திரசேகர் ஹவுஸ் ஓனர், மருதா மற்றும் பேட்டகாளி படங்களில் நடித்திருந்தாலும் அயலி சீரியஸ் மூலமாகவே ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறார். மேலும் இவர் 80s நடிகையான விஜி சந்திரசேகரனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வெற்றிவேல் உள்ளிட்ட கிராமப்புற கதைகளில் வில்லியாகவும், முக்கிய கதாப்பத்திரந்களிலும் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayali actress lovelin history


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->