''அயலான்'' திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு: மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''அயலான்''. இந்த திரைப்படத்தில் ரகுல் ப்ரீத்தி கதாநாயகியாக நடித்துள்ளார். 

ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை 24 ஏ எம் ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. 

அதிக அளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும் 1500 க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்ட இந்த திரைப்படம் பான் இந்திய படமாக வெளியாக உள்ளது. 

இந்திய சினிமாவில் முழு நீள லைவ் ஆக்சன் திரைப்படமாக ''அயலான்'' உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இந்நிலையில் திரைப்படத்தின் மூன்றாவது பாடலான 'சுரோ சுரோ' பாடல் இன்று மாலை 4.02 மணிக்கு வெளியாகும் என பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayalan movie update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->