பிரபல தமிழ் நடிகருக்கு படுகாயம்.. உடனே அறுவை சிகிச்சை மருத்துவர்கள் திட்டவட்டம்.! - Seithipunal
Seithipunal


 

இயக்குனர் விஜய் இயக்கும், "அச்சம் என்பது இல்லையே." திரைப்படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் சூட்டிங் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், லண்டனில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது. 

அடுத்ததாக, தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி இருக்கிறது. இதற்காக மிகப்பெரிய ஷெட் போடப்பட்டு லண்டன் சிறை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் குறித்த ஷூட்டிங் நடந்தபோது நடிகர் அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டு தசைநார் கிழிந்தது. 

இதனை தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். இந்த விபத்தால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் அருண் விஜய் மிகவும் உறுதியாக இருந்தார். எனவே பிசியோதெரபிஸ்ட் உதவியுடன் இந்த வலியை தாங்கிக் கொண்டு படப்பிடிப்பில் அருண் விஜய் பங்கேற்றார். 

இதில் நடிகை நிமிஷா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, எமி ஜாக்சன் ஹீரோயினாக நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின்னர், தமிழில் எமி ஜாக்சன் நடிக்கவுள்ள திரைப்படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

arun vijay get woonds in shooting spot


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->