சுந்தர். சியின் அரண்மனை 4 எப்போது வெளியாகும்? - வெளியானது முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் கடந்த 2021-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'அரண்மனை 3'. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருந்த இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. 

இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்ற நிலையில், இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தின் முந்தைய மூன்று பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இந்த பாகத்திலும் நடித்துள்ளார். இவருடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில், இந்தப் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படம் வெளியாகும் தேதியை படக்குழு இன்று காலை அறிவித்துள்ளது. 

அந்த அறிவிப்பின் படி, அரண்மனை 4 படம் வருகிற 26-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 'அச்சச்சோ' என்ற முதல் பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலில் தமன்னாவும் ராஷி கண்ணாவும் நடனமாடி அசத்தியுள்ளனர். தற்போது இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aranmanai 4 release date announce


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்
Seithipunal
--> -->