அஜித் படத்தில் நான் நடித்தது மிகப்பெரிய தவறு- புலம்பும் அனிகா.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜீத் நடித்து வெளியான படம் என்னை அறிந்தால். இந்த படத்தில் அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருப்பார். அதில் தல அஜித்திற்கு மகளாக நடித்து இருப்பதற்கு முன்பு பல மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கின்றார்.

இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் வெளியான விசுவாசம் திரைப்படத்திலும் அஜித் மற்றும் நயன்தாராவிற்கு மகளாக அவர் நடித்து இருப்பார்.இந்த அப்பா மகள் சென்டிமென்ட் காட்சியானது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

இந்நிலையியல், அனிகா சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் "பலரும் நீ குழந்தை மா..! அதை மறந்துடாத..! இந்த மாதிரி போஸ் கொடுத்து போட்டோ போடாதே.!" எனவும் அறிவுரை வழங்கி வருகின்றனர்

ஆனால் அது குறித்து சிறிதும் கவலைப்படாமல் வயதிற்கு மீறிய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். பலரும் நீங்கள் குழந்தை இது போல உடை அணிவதை தவிர்க்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றனர். இதன் காரணமாக அனிகா கோபமடைந்து அஜித் படங்களில் எதற்காக நடித்தோம் என்று புலம்பி வருகிறாராம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anika angry with ajith fans


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->