காரில் சுற்றி ரோட்டுக்கடையில் சாப்பிட்டதெல்லாம் வேற லெவல் - சிபி குறித்து ஆண்ட்ரியா நெகிழ்ச்சி.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் வட்டம். இப்படத்தில் சிபி சத்யராஜ், சமுத்திரகனி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன், அதுல்யா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். 

இந்த நிலையில், இப்படம் ஜூலை 29-ஆம் தேதி நேடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. மேலும், இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது. இதில் இந்த படக்குழுவினர் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர். 

அப்போது நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளதாவது, "ட்ரீம் வாரியர் என்ற பெரிய நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்து உள்ளது. இந்த படத்தில் நிவாஸின் பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த படத்தில் சிபி சத்யராஜூருடன் பணிபுரிந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 

மேலும், அவருடன் காரில் சுற்றி ரோட்டுக்கடையில் சாப்பிட்டதெல்லாம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இயக்குனர் கமலக்கண்ணன் இந்த படத்தை மிக தெளிவாக இயக்கி உள்ளார். இந்த படத்தை பார்த்து உங்களது ஆதரவை தாருங்கள்". என்று நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்‌.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

andrea say about sibi sathyaraj


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->