வாவ்.. அஜித்குமாரின் #AK 62 குறித்த மாஸ் அப்டேட்.. தயாரான விக்னேஷ்&கோ.!  - Seithipunal
Seithipunal


எச். வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்து அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி ரிலீசாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

அடுத்ததாக அதே கூட்டணியில் துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கின்றது. வாரிசு படத்துடன் துணிவு படம் மோதுவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில் நடிகர் அஜித்தின 62வது படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியாகியது. விக்னேஷ் சிவன் இயக்கும் இந்தப் படத்தில் அனிருத் இசையமைக்க, நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். 

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி வரும் டிசம்பர் மாதத்தில் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு துவங்கி 2023 ஜூன் மாதத்திற்குள் ஷூட்டிங்கை முடித்துவிட்டு ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிடப்பட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ak 62 shooting may start in December


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->