ஷாலினிக்கு முன்பு அஜித்துக்கு இருந்த காதலி.?! அவர் வாயாலேயே கூறிய கதை.!
ajith heera love story
நடிகர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் திரைப்படங்களில் நடிக்கும் பொழுது காதலித்து திருமணம் செய்தனர். அமர்க்களம் திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்தபோது தான் காதல் மலர்ந்தது என்று கூறப்பட்டது.
இருவரும் குடும்ப நண்பர்கள் என்பதால் வீட்டினர் சம்மதித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால், ஷாலினியை காதலிப்பதற்கு முன்பு நடிகர் அஜித்துக்கு வேறொரு காதல் இருந்ததாக கூறப்படுகிறது. அஜித்துடன் ஆரம்ப கால படத்தில் நடித்த ஹீரா தான் அந்த காதலி என்று கூறப்படுகிறது.
காதல் கோட்டை திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக அவர் நடித்திருப்பார். அப்பொழுது இருவரும் காதலித்ததாக கூறப்பட்டது. ஒரு பேட்டியில் அஜித்திடம் இந்த விஷயம் குறித்து கேட்டதற்கு, "ஆமாம் நான் ஹீராவை காதலிக்கிறேன்." என்று அவர் ஆவேசமாக பதில் அளித்திருந்தார்.
என்ன காரணம் என்று தெரியவில்லை சில காலத்திற்குப் பின்னர் இருவரும் இணைந்து திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டனர். அவர்களது காதல் முறிந்து விட்டதாக அப்போது கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. அதன்பின்தான் ஷாலினியுடன் காதல் திருமணம் நடந்தது.