நயன்- விக்கி திருமணத்தில் தல- தளபதியின் ஸ்பெஷல் பங்கு.?! ரசிகர்கள் உற்சாகம்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் வட்டாரத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டு தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.

இந்த நிலையில் இவருக்கும், இயக்குனரான விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இவர்களின் திருமணம் திருப்பதியில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது வெளியான திருமண அழைப்பிதழில் மகாபலிபுரம் என்று போடப்பட்டுள்ளது.

மேலும் திருமணத்திற்கு சினிமா துறைகளை சார்ந்த யாரையும் அழைக்கவில்லை என்றும், 3 பிரபலங்களுக்கு மட்டும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமணத்தை முடித்த பின்பு சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர். 

இந்த நிகழ்ச்சிக்கு திரையுலக பிரபலங்கள் அனைவரையும் அழைக்க முடிவு செய்து இருக்கின்றனர். இதனையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த கையோடு அவரவர் பட வேலையில் ஈடுபட போகிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

தனக்கு பிடித்த நடிகரான விஜய் சேதுபதி மற்றும் தன் நெருங்கிய நண்பரான இயக்குனர் நெல்சன் திலீப்குமார், சமந்தா ஆகிய மூவருக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆனால் விஜய், அஜித் போன்றோருடன் நிறைய படங்களில் பணியாற்றிய நயன்தாரா எப்படி தனது திருமணத்திற்கு அவர்களை அழிக்காமல் இருப்பார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்த நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பிரபல நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் ஆகியோருக்கு அழைப்பு சென்றிருப்பதாகவும், இருவரும் திருமணத்தில் கலந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் எனவும் கூறப்படுகிறது.

இதில் குறிப்பாக அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கிவிருக்கும் காரணத்தால் நிச்சயமாக அஜித் கலந்துகொள்வார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ajith and Vijay in nayanthara marriage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->