மலையாளத்தில் ரசிகர்களிடம் பேசிய விஜய்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்). இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை கேரளாவில் எடுக்க உள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க பல மணி நேரம் காத்திருந்த ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

மேலும் திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதால் விஜய்யை காண மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் குவிந்தனர். அவர்களுடன் விஜய் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.

இதைத்தொடர்ந்து இன்றும் மைதானத்திற்கு வெளியே விஜய்யை காண ரசிகர்கள் திரண்டனர். இதனால் விஜய் அங்கிருந்த கேரவன் வாகனம் மீது ஏறி ரசிகர்களை பார்த்து கையசைத்தார். பின்னர் ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி அசத்தினார். மேலும் "தமிழ்நாட்டில் உள்ள எனது நண்பா நண்பிகள் போல நீங்களும் வேற லெவல் என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay speech to fans in malaiyalam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->