கேரளா வந்த நடிகர் விஜய் - உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் “The Greatest of All Time” என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் விஜய் The Greatest of All Time படத்துக்காக கேரளாவுக்கு சென்றுள்ளார். இதுகுறித்து தகவல் கசிந்ததும் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள், பேனர்கள் என்று மலையாள திரையுலகினரே அதிர்ச்சியடையும் அளவுக்கு வரவேற்பு கொடுத்தனர்.

இந்த நிலையில், விஜய் இன்று சென்னையில் இருந்து திருவனந்தபுரம் வந்தடைந்தார். அவரை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் காலை முதலே விமான நிலையத்தில் குவிந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து மாலை 5 மணியளவில் விமானம் மூலம் கேரளா வந்த விஜய்யை போலீசார் பலத்த பாதுக்காப்புடன் காருக்கு அழைத்துச் சென்றனர். 

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி உள்ளது. 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் கேரளாவுக்கு வந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay going to kerala


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->