விஜயின் 69-வது படத்தை இயக்கப்போவது யார்? - படக்குழு எடுக்கப்போகும் முடிவு என்ன? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் G.O.A.T படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது 69-வது படத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். 

விஜயின் 69-வது படம் அரசியல் சார்ந்த கதை என்று சொல்லப்படுகிறது. டிவிவி தனய்யா தனது தயாரிப்பு பேனரான டிவிவி என்டர்டெயின்மென்ட் மூலம் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை இயக்க பல இயக்குநர்கள் போட்டிப்போட்டு கொண்டுள்ளனர்.

இதில் இயக்குநர்கள் எச்.வினோத், காமெடி நடிகர் ஆர்.ஜே பாலாஜி உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகிறது. இந்த நிலையில், இந்த படத்தை இயக்கப்போகும் இயக்குநர் யார்? என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதால் ரசிகர்களிடையே இந்த படம் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகளவில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay 69 movie update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->