அடேங்கப்பா.! வாய்ப்பே இல்லை,கண்டிப்பா இவரது வருகை பெரிய விருந்துதான், உச்சகட்ட மகிழ்ச்சியில் பாராட்டித் தள்ளிய சூர்யா.! - Seithipunal
Seithipunal


ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எமி ஜாக்சன் மற்றும் அக்‌ஷய்குமார் ஆகியோர் நடிப்பில் உலகம் முழுவதும் இன்று வெளியானது  2.௦ திரைப்படம். 

 உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவரும் 2.0 படத்திற்கு, வாழ்த்து தெரிவித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் "தமிழ் சினிமாவின் எல்லையை, ரஜினி சார்  மிகப்பெரிய அளவில் விரிவாக்கியுள்ளார். மேலும் அதற்காக அவர் பெருமளவில் உழைத்துள்ளார். எப்போதும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அது ரஜினி சார் மட்டும் தான்.

சங்கர் சாரின் பிரம்மாண்டமான பார்வைகள்  என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்தும். மேலும் அவரே சினிமாவின் பலம் என்ன என்பதை 
நிரூபித்தவர். மேலும், இசைக்கு மறு வடிவம் கொடுத்த  ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்கள் நிச்சயம் அனைவரின் காதுகளிலும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கும். 

 லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான முறையில் 2.0 படத்தை தயாரித்துள்ளார்கள். அவர்கள் கண்டிப்பாக தமிழ் சினிமாவை உலகத் தரத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள். 

மேலும் அக்ஷய் சாரின் வருகை தமிழ் சினிமாவிற்கு பெரிய விருந்தாக அமையும் என்பது நிச்சயம். 2.0 மிகப் பிரம்மாண்டமான வெற்றி பெற வாழ்த்துகள். இதை விட பெரிய சினிமா வர வாய்ப்பில்லை என்று நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

English Summary

Actor surya wish 2.0 movie


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal