பிரபல நடிகரின் மனைவி காலமானார்! ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இரங்கல்!! - Seithipunal
Seithipunal


நடிகரும், அதிமுக முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான எஸ்.எஸ்.சந்திரன் மனைவி ராஜம் காலமானார். ராஜம் இறப்பிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

                  

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கொள்கை பரப்பு முன்னாள் துணை செயலாளரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும், பிரபல நகைச்சுவை நடிகருமான மறைந்த எஸ். எஸ். சந்திரன், மனைவி ராஜம் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். 

அன்பு சகோதரர் சகோதரி திருமதி ராஜம் அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறோம் என்று இரங்கல் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor ss chanthiran wife death


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->