தனுஷுடன் இணையும் பிரபல நடிகர்.! யார் இவர்? - Seithipunal
Seithipunal


தனுஷுடன் இணையும் பிரபல நடிகர்.! யார் இவர்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானார். அதன் பின்னர் காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதையைக் கண்டேன் திருச்சிற்றம்பலம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து அவர் மீண்டும் இயக்குநராக களமிறங்கும் 50-வதுபடம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். 
இந்தப் படத்தில், எஸ்.ஜே. சூர்யா தனுஷுக்கு மூத்த சகோதரராகவும், சந்தீப் கிஷன் இளைய சகோதரராகவும் நடிக்க உள்ளனர். 

இதில், சந்தீப் ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்திலேயே தனுஷூடன் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் குடும்ப சென்டிமென்ட்டும் கலந்த கமர்ஷியல் படமாக இருக்கும் என்கின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor sj surya joint dhanush movie


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->