நடிகர் சிவகுமாருக்கு என்ன ஆனது?! வெளியான அதிர்ச்சி தகவலால்., பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களான சூர்யா, கார்த்தியின் தந்தை சிவகுமார் கொரோனா தோற்று ஏற்பட்டு, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சிவகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில், ஒரு வாரமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும், அவருக்கு அறிகுறி ஏதும் இல்லாத கொரோனா தொற்று உள்ளதாகவும், அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே, அவர் நலமுடன் உள்ளதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் இதுகுறித்து எந்த உறுதியான, அதிகாரபூர்வமான தகவலையும் அவரது குடும்பத்தினர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ACTOR SIVAKUMAR AFFECTED CORONA


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal