எனக்கும் விஜய்க்கும் போட்டின்னு சொல்றாங்க - மேடையில் மனமுடைந்து பேசிய ரஜினிகாந்த்.! - Seithipunal
Seithipunal


ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த்;- "விஜய் என் கண்ணுக்கு முன்னால வளர்ந்த பையன். தர்மத்தின் தலைவன் அவர். 

ஷூட்டிங் அப்போ விஜய்க்கு 13, 14 வயசிருக்கும், ஷுட் முடிஞ்சதும் சந்திரசேகர் என்னுடைய மகன் என்று அறிமுகம் செய்தார். நடிப்பில் ரொம்ப ஆர்வம் இருக்கான். நீங்க சொல்லுங்க. படிச்சுட்டு வந்து ஆக்ட் பண்லாம்ன்னு நீங்க சொல்லுங்க என்றார். 

அப்ப விஜய்ட்ட “நல்லா படிப்பா. அதுக்கப்புறம் ஆக்டர் ஆகலாம்ன்னு சொன்னேன். அதன் பின்னர் விஜய் ஆக்டர் ஆகி, படிப்படியா அவருடைய டிசிப்ளின், திறமை, உழைப்பால இப்ப உயர்வான இடத்துல இருக்கார். 

நெக்ஸ்ட் அரசியல்… சமூகசேவைனு போக இருக்கார். இதுல வந்துட்டு… எனக்கும் விஜய்க்கும் போட்டினு சொல்றது நெஜம்மா… ரொம்ப கஷ்டமா இருக்கு மனசு. தயவு செஞ்சு ரெண்டு பேருடைய ரசிகர்களும் ஒப்பிடவேண்டாம். 

இது என்னுடைய அன்பான வேண்டுகோள் என்று பேசியுள்ளார். மேலும், சமீபத்தில் நான் கூறிய காக்கா கழுகு கதை விஜயை விமர்சித்ததாக சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது மிகவும் வருத்தமளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor rajinikant speech lal salam audio launch


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->