மகள் திருமணத்திற்கு முதல்வருக்கு அழைப்பு விடுத்த நடிகர் பிரபு.! - Seithipunal
Seithipunal


இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப்  பட விழாவில் பேசிய விஷால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட இருவரும் இந்தப் படத்திற்குப் பிறகு ஆதிக்கிற்கு திருமணம் நடக்கும் என்று வாழ்த்துத் தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில் தான், ஆதிக்கிற்கும், நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் விரைவில் திருமணம் என்ற செய்தி வெளியானது. இதனை உறுதி செய்யும் விதமாக, நடிகர் பிரபு முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னதாக ஐஸ்வர்யா கடந்த 2009-ம் ஆண்டு குணால் என்பவரைத் திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆன நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். 

அப்போது தான் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா இருவரும் காதலித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor prabhu invite cm mk stalin for daughter aiswarya marriage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->